திருப்பூர், மார்ச்.11: திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு(41).செப்டிக் டேங் வாகன டிரைவர். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். பாரப்பாளையம் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் ரயில்வே எஸ்.ஐ சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post ஓட்டுநர் ரயில் மோதி பலி appeared first on Dinakaran.