வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு

 

திருப்பூர், மார்ச் 10: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் முழு ஒதுக்கீடு செய்து எடை குறைவில்லாமல் அனுப்பிட வேண்டும். மளிகை பொருட்கள் விற்பனையாளர்களிடம் தேவைப்பட்டியல் பெற்று தேவையான பொருட்கள் மட்டும் அனுப்பப்பட வேண்டும்.

வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு பெயர்வு விற்பனை மூலம் பொருட்கள் வழங்க கூடுதலாக 10% ஒதுக்கீடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையை மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தாமல் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த ரேஷன் கடைகளை சரி செய்து கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஏப்ரல் 20ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் மாநாட்டில் ரேஷன் கடை பணியாளர்களை திருப்பூரில் இருந்து திரளாக கலந்து கொள்ள செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: