11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்

 

திருப்பூர், மார்ச் 5: தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 92 தேர்வு மையங்களில் 27,237 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்விற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தின் 4 கட்டு காப்பு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்களில் தேர்விற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 92 தலைமை ஆசிரியர்களும், 92 துறை அலுவலர்களும், அறைக்கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,570 ஆசிரியர்களும் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பி அடித்தல் மற்றும் ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடுதலை கண்காணிப்பதற்கு தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மூலமாக 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு முன்னதாகவும், தேர்வின் போதும் மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

The post 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: