புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

 

திருப்பூர், மார்ச் 5: திருப்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சைதிப் கசப் (24) என்பதும், அவரிடம் 7 கிலோ 750 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரக் சந்திர மாலிக் (34) என்பவரை சோதனை செய்ததில் இவரிடம் 7 கிலோ 500 கிராம் புகையிலை இருப்பது தெரியவந்தது.

மேலும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரவின் குமார் (21) என்பவரை சோதனை செய்ததில் 1 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 16 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: