திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம் விருதானது வழங்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 10 பெருந்தகையாளர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கி வருகிறார். அதன்படி அய்யன் திருவள்ளுவர் விருது – மு.படிக்கராமு, பேரறிஞர் அண்ணா விருது – தஞ்சை கீழையூர் எல். கணேசன், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பேரறிஞர் அண்ணா விருது – தஞ்சை கீழையூர் எல். கணேசன், பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொன்.செல்வகணபதி, தமிழ் தென்றல் திரு.வி.க. விருது – ரவீந்திரநாத், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது – வே.மு. பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருது – எம்.பி. ரவிக்குமார், முத்தமிழறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி உள்ளிட்டோருக்கு விருதுகளை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
விருதுவுடன் அதற்கான தகுதி உரை, காசோலைகள் மற்றும் தங்கம் பதக்கங்களை வழங்கி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 10 பெருந்தகையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கினார் முதல்வர் மு.க ஸ்டாலின்! appeared first on Dinakaran.