பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை-மதுரை விமான கட்டணம் ‘கிடுகிடு’ உயர்வு: ரூ.4,300ல் இருந்து ரூ.14,621 ஆனது

மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் சென்னை-மதுரை இடையே விமானக் கட்டணம் 3 மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பணி நிமித்தமாக சென்னையில் தங்கியிருப்போர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால், விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை-மதுரை இடையே செல்ல வழக்கமான நாட்களில் விமானக் கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படும். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன.11) சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்கு, விமான கட்டணம் ரூ.14,621 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது 3 மடங்குக்கும் அதிகமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல, நாளை மறுநாள் (ஜன.12) விமான கட்டணம் ரூ.10,911 எனவும், 13ம் தேதி ரூ.7,164 எனவும் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடித்து மதுரையில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணம் வரும் 19ம் தேதிக்கு ரூ.10,294 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கத்தைவிட இரண்டு மடங்குக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மேலும் உயரக்கூடும் என விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை-மதுரை விமான கட்டணம் ‘கிடுகிடு’ உயர்வு: ரூ.4,300ல் இருந்து ரூ.14,621 ஆனது appeared first on Dinakaran.

Related Stories: