சிவகங்கை, ஜன. 10: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருங்கைகள் தினத்தையொட்டி அவர்களது நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2025ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுடன், ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
அரசின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கைகளாக இருத்தல் வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகளாக இருத்தல் வேண்டும். எனவே, தகுதியுடைய நபர்கள் //awards.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். விரிவான கருத்துருக்களை 10.02.2025ம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post சிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.