பழநி அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

பழநி, ஜன. 10: பழநி அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். பழநி அருகே 54 புதூரை சேர்ந்தவர் நாகராஜன் (34). விவசாயி. திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சம்பா குளத்தின் கரையில் நாகராஜனின் செருப்பு, லுங்கி, சட்டை உள்ளிட்டவையும், மீன் பிடிப்பதற்கான பொருட்களும் கிடந்துள்ளன.

இதனால் நீரில் மூழ்கி இருக்கலாமென சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்தனர். சுமார் 3 மணிநேரம் தேடுதல் வேட்டை நடத்தி நாகராஜனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீன் பிடிக்க சென்றவர் குளத்தின் பள்ளமான பகுதிகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாமென போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழநி அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: