* கோலாலம்பூரில் நடைபெறும் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அவற்றின் கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ்/தனிஷா, கருணாகரன்/அதயா, பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிசா/காயத்ரி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோற்று வெளியேறினர்.
* ‘பெண்கள் விளையாட, பெண்கள் விளையாட்டு போட்டிகள் நடத்த ஆப்கானிஸ்தான் அரசு அனுமதிப்பதில்லை. எனவே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிப்.21ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா விளையாடமல் புறக்கணிக்க வேண்டும்’ என்று அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் கெய்டன் மெக்கன்சி வலியுறுத்தி வருகிறார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ‘கவுதம் கம்பீர் ஒரு நயவஞ்சகர். அவர் சொல்வது போல் செயல்படுவதில்லை. மற்றவர்களின் வெற்றிக்கு அவர் உரிமை கொண்டாடுகிறார்’ என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக சாடியுள்ளார்.
* நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்தில்(38) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளாார். நியூசி அணிக்காக 2009ம் ஆண்டு அறிமுகமான குப்தில் 2022ம் ஆண்டு வரை 47டெஸ்ட், 198ஒருநாள், 122டி20 ஆட்டங்களில் விளையாடி முறையே 2586, 7346, 3531 ரன் விளாசியுள்ளார்.
* ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீன் முதுகில் ஏற்பட்ட காரணமாக அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். தொடர் ஓய்வில் இருந்த கிரீன் சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து ஆஸி அணி தலைமைத் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, ‘ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாட கிரீன் ஆயுத்தமாகி விடுவார்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கணுக்கால் காயம் காரணாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கேப்டன் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.