அசாம் நிலக்கரி சுரங்கத்தில் 4வது நாளாக மீட்பு பணிகள்

கவுகாத்தி: அசாமின் திமா ஹசாங் மாவட்டத்தில் உள்ள உம்ரங்சோவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் மழை நீர் புகுந்ததில் 9 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நீடித்து வருகின்றது.  கடற்படையினர், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், ஓஎன்ஜிசி, இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை கண்டுபிடிப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தொழிலாளியின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது.

மீதமுள்ள 8 தொழிலாளர்களை கண்டறிய முடியவில்லை. இரவு முழுவதும் சுரங்கத்திற்குள் புகுந்த நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று காலை தொழிலாளர்களை தேடும் பணிகள் தொடங்கியது. ரிமோட் மூலமாக இயக்கப்படும் வாகனம் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கத்திற்குள் சென்று தேடுதல் பணியை மேற்கொண்டது. எனினும் நேற்று பிற்பகல் வரை எந்த தொழிலாளியும் கண்டறியப்படவில்லை. நிலக்கரி சுரங்கத்திற்குள் இருக்கும் தண்ணீர் கருப்பாக மாறியுள்ளதால் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அசாம் நிலக்கரி சுரங்கத்தில் 4வது நாளாக மீட்பு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: