எதிர்காலம் போரில் இல்லை அமைதியில் இருக்கிறது: வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புவனேஷ்வர்: நமது பாரம்பரியத்தின் வலிமை காரணமாக எதிர்காலம் போரில் இல்லை, அமைதியில் இருக்கிறது என்று உலகிற்கு இந்தியா கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல. இங்குள்ள மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இது சொந்த கருத்துக்கள் மட்டுமல்ல. உலகளாவிய தெற்கின் கருத்துக்களையும் வலுவாக முன்வைக்கின்றது. பாரம்பரியத்தின் வலிமை காரணமாக, எதிர்காலம் போரில் இல்லை.

புத்தரிடம்(அமைதி) உள்ளது என்பதை இந்தியா உலகிற்கு கூற முடிகின்றது. புலம் பெயர்ந்தோரை அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்தியாவின் தூதராக எப்போதும் கருதுகிறேன். நெருக்கடி சூழ்நிலைகளில் அவர்கள் எங்கு இருந்தாலும், எங்களது புலம் பெயர்ந்தோருக்கு உதவுவதை எங்களது பொறுப்பாக கருதுகிறோம். இந்திய ஒரு இளம் நாடு மட்டுமல்ல, திறமையான இளைஞர்களின் நாடாகும். இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அவர்கள் திறன்களுடன் செல்வதை அரசு உறுதி செய்கிறது” என்றார்.

* இந்தியாவின் பங்களிப்பு மிகப்பெரியது
புவனேஷ்வரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பேசிய டிரினிடாட் மற்றும் டொபாகோ அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலு கூறுகையில், ‘‘உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு. 700 ஆண்டுகளுக்கு முன் தக்‌ஷஷீலாவில் நிறுவப்பட்டது. இயற்கணிதம், முக்கோணவியல் மற்றும் நுண்கணிதம் உள்ளிட்டவை இந்தியாவில் உருவாக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை” என்றார்.

The post எதிர்காலம் போரில் இல்லை அமைதியில் இருக்கிறது: வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: