- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- சென்னை
- அண்ணா சேலை, சென்னை
- முதல் அமைச்சர்
- மு.க.ஸ்டாலின்…
- துணை
- தின மலர்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி, பணிக்காலத்தின்போது உயிரிழந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பதவியேற்ற 2021ம் ஆண்டு மே 7ம் தேதிமுதல் இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பதவிகளுக்கான 2,420 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வழங்கப்பட்ட 311 பணி நியமன ஆணைகளை சேர்த்து மொத்தம் 2,731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் முறையாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய கைபேசி செயலி புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி வாயிலாக, மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ஒரு லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மின்சார வாரிய ஓய்வூதியதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான இந்த புதிய செயலியினை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, மூன்று ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார்.
The post தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 311 பேருக்கு பணிஆணை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.