நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்: அரசு உதவிட தொழிலாளர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலுக்கு அரசு சார்பில் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாள் தை பொங்கள் பண்டிகை ஜனவரி 14ம் தேதியும், 15ம் தேதி மாட்டு பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளனர். இந்த பொங்கள் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு அடுத்த திருமணி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (52). இவர் இந்த பகுதியில் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றார். இவர் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மண் அடுப்பு, பானை உள்ளிட்ட மண்பாண்டங்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 5 தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருவதாகவும். ஆனால், போதிய ஊதியம் கிடைக்கவில்லை என வேதனையாக உள்ளது.

முன்பு பெரிய பெரிய மண்பாண்டங்கள் பயன்படுத்தியதால் பெரிய மண்பாண்டங்களை தயாரித்தோம். ஆனால், இன்றைய காலத்தில் மக்கள் பெரிய மண்பாண்ட பொருட்களை பயன்படுத்துவதில்லை. இதனால், எங்கள் மண் பாண்ட தொழிலும் நாளுக்கு நாள் நளிவடைந்து வருகிறது. அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் உணவு விரைவாக தயாராகிவிடும். ஆனால், சுவை இருக்காது நீண்ட ஆயுள் வாழ முடியாது. இதுவே, மண்பாண்டங்களில் சமைத்தால் சில நிமிடங்கள் தாமதமாக தயாராகும் உணவு சுவையாக இருக்கும் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும். நாளுக்கு நாள் நளிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை அரசு காக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

மேலும், ஆண்டிற்க்கு ஒரு முறை தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையின்போது அலுமினிய பார்த்திரத்தை தவிர்த்து மண் பானைகளை சமைத்து சுவையாக சாப்பிடுங்கள் உடலும் நலமாக இருக்கும். மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் தயாராகி வரும் மண் பானைகளில் பொதுமக்கள் பொங்கள் வைத்து கொண்டாட வேண்டும். மேலும், மண் பானைகள் விற்பனையானால் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும்’ கூறினார்.

 

The post நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்: அரசு உதவிட தொழிலாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: