சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட 3 பேருந்து நிலையங்கள் பகுதிக்கு மாநகர் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள 3 பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் 13ம் தேதிவரை 4 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்திற்கு இன்று முதல் வரும் 13ம் தேதி வரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.