பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு

கடலூர்: நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வடலூரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துகள் அனைத்தும் அவதூறு கருத்துக்கள் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழும்பியது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ் ஐ ராஜாங்கம் மற்றும் போலீசார் முன்னிலையில் சீமான் மீது பொது இடத்தில் அமைதியை குறைக்கும் விதமாக பேசுவது, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: