இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் நக்சலைட்டுகள் 3 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 3 நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில நக்சலைட்டுகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப்படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
The post சத்தீஷ்கரில் சுக்மா-பிஜாப்பூர் எல்லையின் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.