சென்னை: சிறுமி பாலியல் வழக்கில் கைதான அதிமுக வட்ட செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், அண்ணாநகர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், பெண் இன்ஸ்பெக்டர் ராஜி சிறையில் அடைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
The post சிறுமி பாலியல் வழக்கில் கைதான அதிமுக வட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.