2 நாளில் நாதக வேட்பாளர் சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வடலூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வேட்பாளர் 2 நாட்களில் அறிவிக்கப்படுவார்’ என்றார்.

மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு: தேர்தல் கண்காணிப்பு பணிக்காக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா மற்றும் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர்ந்தல் குறித்து புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு எண்ணும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 94890 93223 எனும் எண்ணில் அரசியல் கட்சியினர் அல்லது பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தேர்தல் குறித்த புகார்கள் அல்லது தகவல்கள் ஏதாவது இருந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பி ஆபீசில் தேர்தல் பிரிவு துவக்கம்: இடைத்தேர்தலையொட்டி மாவட்ட காவல் துறை சார்பில் தேர்தல் தொடர்பான புகார்களை பெறவும், விதிமீறலில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மீது வழக்குகள் பதிவு செய்யவும், அரசியல் கட்சியினர் நடவடிக்கை, தலைவர்கள் வருகை கண்காணிக்க தேர்தல் பிரிவு அலுவலகம் ஈரோடு எஸ்பி அலுவலக தரைத்தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி, எஸ்ஐக்கள் கணேசன், தமிழ்செல்வி மற்றும் 10 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 2 நாளில் நாதக வேட்பாளர் சீமான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: