ஓசியில் டூவீலரை ரிப்பேர் பார்க்கச்சொல்லி மெக்கானிக்கை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட்

வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (31). வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். பாலமேடு போலீஸ் எஸ்ஐயான அண்ணாதுரை, கடந்த 4ம் தேதி மற்றொரு போலீசுடன் அந்த ஒர்க் ஷாப்புக்கு சென்று சீனிவாசனை தாக்கியுள்ளார். பின் அவரை காரில் ஏற்றியுள்ளார். இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சீனிவாசன், மதுரை எஸ்பி, கலெக்டர், முதல்வர் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணையம் என பல்வேறு துறைகளுக்கு, எஸ்ஐ அண்ணாதுரை, தனது டூவீலரை இலவசமாக ரிப்பேர் பார்த்து தருமாறு கூறி, தன்னை தாக்கியதாக புகார் மனு அளித்திருந்தார். இதையடுத்து விசாரணை நடத்தி எஸ்ஐ அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து தென்மண்டல ஐஜி பிரேம் ஆன்ந்த் சின்கா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post ஓசியில் டூவீலரை ரிப்பேர் பார்க்கச்சொல்லி மெக்கானிக்கை தாக்கிய எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: