இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை கடந்த 2023ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூலமாக பயணிக்கும் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தன. இதனையடுத்து போக்குவரத்து சேவையை ஒங்கிணைக்கும் பொருட்டும், நவீனமயமாக்கலை நோக்கியும் மின்சார ரயில், மெட்ரோ, பஸ் உள்ளிட்டவைகளில் பயணம் மேற்கொள்ளும் வகையில் தற்போது சிங்கார சென்னை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பஸ் கண்டக்டர்களிடம் சில்லரை பிரச்னை இல்லை, எளிதில் பணம் பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளன.
இந்த கார்டை போன் ரீசார்ஜ் செய்வது போல ஜிபே மற்றும் போன் பே மூலமாக ரூ.100 முதல் ரூ.2000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கான ஆயுட்காலம் என்பது ஏதுவும் இல்லை. அதேபோல், மெட்ரோ கார்டு வைத்திருப்பவர்களும் பஸ்களில் பயணிக்க முடியும். ஆன்லைன் ரீசார்ஜ் தவிர போர்ட்டல்கள் மூலமாகவும், கைபேசி செயலி மற்றும் மாநகர போக்குவரத்து கழக பயண சீட்டு விற்பனை மையங்களிலும் ரீசார்ஜ் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், பேருந்து கண்டக்டர்களிடமும் ரீசாஜ் செய்யும் வசதியை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post சிங்கார சென்னை பயண அட்டை வாங்க மக்கள் ஆர்வம் ரூ.2,000 வரை ரீசார்ஜ் செய்யலாம்: பிராட்வே, சென்ட்ரல் பஸ் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றனர் appeared first on Dinakaran.