இந்நிலையில் இந்த ஆய்வு கருவிகளில் கிராப்ஸ்(CROPS) ஆய்வுக் கருவியில் விதைகள் 4 நாட்களில் முளைத்தது, தற்போது முளைத்த விதைகளில் இருந்து இலைகள் துளிர்விட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆராய்ச்சி கருவி, சுறுக்கமாக கிராப்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கருவியில் ஒரு மூடப்பட்ட பெட்டியில் 8 காராமணி விதைகளை வெப்பக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க திட்டமிட்டது. மேலும் இதில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு செறிவுகள், சுற்றுப்புற ஈரப்பதம் வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றின் கண்காணிப்பு உடன் தாவர வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஆய்வுகருவிகள் நிலை நிறுத்தப்பட்ட 4 நாட்களில் காராமணி விதைகள் முளைத்து. அதை தொடர்ந்து 2 நாட்களில் முளைத்த விதைகளில் இருந்து இலைகள் துளிர்விட்டுள்ளது.
நுண் புவிஈர்ப்புச் சூழலில் விதைகள் துளிர்விடவும், அந்த விதைகளில் முளைத்த இரு இலைகள் 5 முதல் 7 நாள் வரை உயிர்ப்புடன் உள்ளதா என்பதை அறிய இந்த சோதனை திட்டமிடப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் காராமணி விதைகள் விண்வெளியில் முதல் இலைகளை துளிர்விட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட புவி வட்ட ஆய்வு தொகுப்பில் இலைகள் தோன்றின, இதன்முலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
The post நுண் புவிஈர்ப்பு சூழலில் விதைகளில் இருந்து துளிர்விட்ட இலைகள்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.