கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சமுதாய நலக்கூடங்கள், முதல்வர் படைப்பகம், நூலகங்கள், ஏரிக்கரை மற்றும் கடற்கரையை மேம்படுத்துதல் என பல்வேறு திட்டங்களாக விளக்கக் கூடிய வகையில் புகைப்படப் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில் 84 புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அரங்கில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வால்டாக்ஸ் சாலை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகள் மாதிரி வடிவம், கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் மாதிரி வடிவம், கொளத்தூர் மக்கள் சேவை மையம் மாதிரி வடிவம் மற்றும் கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தின் மூன்றாம் கட்டிடம் மாதிரி வடிவம் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
The post சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி: அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார் appeared first on Dinakaran.