சின்னசேலம்: சின்னசேலம் ஏரியில் நீர் நிறைந்து வருவதால் ஏரிக்கு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. சின்னசேலம் நகரின் மையப்பகுதியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கோமுகி அணையில் இருந்தும், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள ஓடைகளில் இருந்தும் ஏரிக்கு இருந்து வருகிறது. மேலும் இந்த ஏரியின் வளாக பகுதியில் குடிநீர் கிணறுகள் வெட்டி நகர பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏரி சின்னசேலம் பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பயன்படுகிறது. தற்போது கோமுகி அணை திறப்பின் காரணமாக சின்னசேலம் அருகில் உள்ள ஏரிகள் நிரம்பி சின்னசேலம் ஏரிக்கு தற்போது தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தற்போது சின்னசேலம் ஏரி முக்கால்வாசி நிரம்பி உள்ளது.
தற்போது ஏரியை பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது. இந்நிலையில் சின்னசேலம் ஏரியில் உள்ள மரங்கள் செடிகளில் வெள்ளை நிற கொக்குகள், நாரை அதிகளவில் வந்து ஊட்கார்ந்து கொள்கிறது. இதை அந்த வழியே செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏரியில் உள்ள கருவேல மரங்களில் மாலை நேரங்களில் வெளிநாட்டு பறவைகளும் அதிக அளவில் உட்கார்ந்து உள்ளது. குறிப்பாக தற்போது ஏரியில் நீர் நிறைந்துள்ளதால் பறவைகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளது. இதை மாலை நேரங்களில் சின்னசேலம் பகுதி மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
The post பறவைகளின் புகலிடமாக மாறிவரும் சின்னசேலம் ஏரி appeared first on Dinakaran.