ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

சிவகங்கை, ஜன.7: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள பகுதிகள் முழுமையாகவும், வாணியங்குடி ஊராட்சியில் உள்ள சில பகுதிகளையும் சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்த நிலையில் சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சி இணைப்பை எதிர்த்து கலெக்டர் அலுவலகம் முன் காஞ்சிரங்கால் மற்றும் வாணியங்குடி ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சியுடன் இணைந்தால் வரி உயர்வு, 100நாள் வேலை திட்டம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குறிப்பிட்ட சிலர் மற்றும் கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று மனு அளிக்க போலீசார் அனுமதித்தனர். உள்ளே சென்று மனு அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: