லாரியில் ஏறி திருட முயன்ற 2பேர் கைது

சேலம், ஜன.7: சேலம் காடையாம்பட்டி பக்கமுள்ள ஜோடுகுழி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (32). லாரி டிரைவரான இவர், நேற்றுமுன்தினம் லாரியில் துணி லோடுகளை ஏற்றிக்கொண்டு சீலநாயக்கன்பட்டிக்கு வந்தார். அதே பகுதியில் உள்ள சின்னபச்சைக்காடு என்ற இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு, சாப்பிடுவதற்காக சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு லாரிக்கு வந்தார். அப்போது 2 பேர் லாரியில் திருடுவதற்காக தேடிக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிடித்த அசோக்குமார், அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்த சுரேஷ்(32), காந்திமகான் தெருவை சேர்ந்த பால்ராஜ்(50) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுத்தியல், திருப்புளி, ஸ்ேபனர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post லாரியில் ஏறி திருட முயன்ற 2பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: