சேரன்மகாதேவி பொழிக்கரையில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டம் துவக்க விழா

வீரவநல்லூர்,ஜன.7: சேரன்மகாதேவி பொழிக்கரை இந்து நாடார் துவக்கப்பள்ளியில் மாணவிகளிடையே சிறுசேமிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்ட துவக்க விழா நடந்தது. இதில் பள்ளி செயலாளர் லோகிதாசன் தலைமை வகித்தார். அம்பை அஞ்சலக உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை அஞ்சலக அதிகாரி சுடர்வேல் முருகன், பேரூராட்சி கவுன்சிலர் முருகன்ரவிசந்தர், தலைமையாசிரியை பாக்கியத்தாய் ஆகியோர் சிறுசேமிப்பு குறித்து விளக்கவுரையாற்றினர். 25 மாணவிகள் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். கிளை அஞ்சல அதிகாரி கவுசல்யா, சேரன்மகாதேவி தொழிலதிபர் வினோத் கலந்துகொண்டனர்.

The post சேரன்மகாதேவி பொழிக்கரையில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டம் துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: