இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது: இந்திய எல்லைக்கு அருகில் திபெத்தில் உள்ள யர்லுங் சாங்போ என்ற பெயரில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது அணை கட்ட சீனா கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சலப் பிரதேசத்துக்கும், அதைத்தொடர்ந்து வங்காளதேசத்துக்கும் செல்லும் போது சீனாவுக்குள் நுழைந்து பெரிய யு-டர்ன் செய்யும் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் மிகப்பெரிய அணை கட்டப்படும். பிரம்மபுத்ராவின் குறுக்கே மிகப்பெரிய அணையை கட்டுவதால் அதன் கீழ் பகுதியில் இந்தியா, வங்கதேசம் நாடுகளுக்கு தண்ணீர் செல்வதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. அதே சமயம் பாதுகாப்பு பிரச்சினைகள் ஆய்வுகள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே தற்போது எப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதோ, அதே அளவு தண்ணீர் அணை கட்டிய பிறகும் சீனா வழங்கும். மேலும் அணை பராமரிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது: சீனா சொல்கிறது appeared first on Dinakaran.