கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது

லாஸ்ஏஞ்சல்ஸ்: 82வது கோல்டன் குளோப்ஸ் 2025 கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. 82வது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை நடிகையான நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை ஒரு பெண் தனியாக தொகுத்து வழங்குவது முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில், 2024-ம் ஆண்டு வெளியான, பிரஞ்சு மியூசிக்கல் க்ரைம் காமெடி படமான எமிலியா பெரெஸ், சிறந்த மோஷன் பிக்சர் (இசை அல்லது காமெடி), சிறந்த இயக்குனர் (ஜாக் ஆடியார்ட்), சிறந்த நடிகை (கர்லா சோபியா காஸ்கன்) மற்றும் சிறந்த துணை நடிகை (ஸோ சல்டானா மற்றும் செலினா கோம்ஸ்) உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.

தொலைக்காட்சியில், மிகவும் விரும்பப்படும் எஃப்எக்ஸ் தொடரான தி பியர் 5 விருதுகளுக்கு பரிந்துரைகளுடன் முன்னணியில் இருந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு எஃப்எக்ஸ் தொடரான ஷோகன் மற்றும் ஹுலுவின் ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் 4 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த சர்வதேச பட்டங்களைத் தவிர, இந்தியாவின் பெண் இயக்குனர் பாயல் கபாடியாவின் இயக்கத்தில் வெளியான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் 2 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பாயல் கபாடியா போட்டியில் இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக 2 விருதுகளையும் இப்படம் நழுவவிட்டது.

ஜாக் ஆடியார்டின் இயக்கத்தில் வெளியான எமிலியா பெரெஸ் திரைப்படத்திற்க்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. இதனால் கோல்டன் குளோப் விருதில் இந்தியாவின் 43 ஆண்டுகால கனவு மீண்டும் ஏமாற்றத்தில் முடிந்தது. ஆனால், பாயல் கபாடியா வெற்றி பெறவில்லை என்றாலும், கோல்டன் குளோப் விருதில் சிறந்த இயக்குனர் விருதுக்கு பரிந்துரைசெய்யப்பட்ட முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்றார். தி ப்ரூடலிஸ்ட் (The Brutalist) படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என 3 முக்கிய கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது.

போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் வடிவமைப்பைப் பற்றிய இந்த படத்தை இயக்கிய பிராடி கார்பெட்டிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. இப்படத்தின் நாயகன் அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். சிறந்த நடிகையாக ‘I’m Still Here’ பட நாயகி Fernanda Torres தேர்வானார். இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் விருது வெல்லும் வாய்ப்பை இழந்தது. ‘தி ப்ரூடலிஸ்ட்’ (The Brutalist) படத்திற்கு அடுத்தபடியாக, எமிலியா பெரெஸ் (Emilia Perez) படம், சிறந்த மியூசிக்கல் மற்றும் காமெடி பிரிவில் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த துணை நடிகை, ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் சிறந்த படம் ஆகிய விருதுகளும் எமிலியா பெரெஸ் படத்திற்கு கிடைத்தது.

The post கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது appeared first on Dinakaran.

Related Stories: