சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னா: பீகாரில் சமீபத்தில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடந்த 2ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அவரது ஆதரவாளர்களும் அவருடன் உண்ணாவிரதத்தை பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். தடை செய்யப்பட்ட பகுதிக்கு அருகே போராட்டத்தல் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்பதால் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரை போலீசார் தாக்கியதாக ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் பிரசாந்த்தை கைது செய்வதை தடுக்க முயன்ற ஆதரவாளர்களை தான் அப்புறப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோர் கைது appeared first on Dinakaran.

Related Stories: