புதுடெல்லி: டம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா, ஒடிசா, காஷ்மீர் முதல்வர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது இந்தியா மீதான பார்வையை மாற்றுவதற்கும், மக்களின் மன உறுதியை உயர்த்துவதற்கும் வழிவகுத்தது. மக்கள் அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க விரும்புகின்றனர். இது அதிவேக ரயில்களுக்கான தேவையை அதிகரிக்க வழிவகுத்தது. தற்போது 136க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. சமீபத்திய சோதனை ஓட்டத்தில் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தியாவில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை கூறிக் கொள்கிறேன். இந்த புத்தாண்டில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைப்பதில் இந்தியா வேகத்தை அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குதல், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து இணைப்பை அதிகரித்தல், அதன் மூலம் வேலைவாய்ப்பு, தொழில்துறையை ஆதரித்தல் ஆகியவை ரயில்வே துறையின் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் யோசனைகள். நாடு முழுவதும் மெட்ரோ ரயில் விரிவாக்கமும் விரைவாக நடந்து வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post பல்வேறு ரயில் திட்டப்பணிகள் தொடக்கம் புல்லட் ரயில் இயக்கும் காலம் தூரத்தில் இல்லை: பிரதமர் மோடி நம்பிக்கை appeared first on Dinakaran.