×

ரூ.2.50 லட்சம் போதைப்பொருளுடன் ராக்கெட் ராஜா கூட்டாளி கைது: 8 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்

கோவை: கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று ரோந்து சென்றபோது லட்சுமிபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போதைபொருள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம், நாடார் தெருவை சேர்ந்த ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்ளன.

இதில், கடந்த 2016ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கோவையில் போலீசார் தேடினர். அப்போது தப்ப முயன்றதில் அவருக்கு இரண்டு கால்களும் முறிந்தது. இவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் கூட்டாளி ஆவார். தற்போது சென்னை அசோக் நகரில் வசிக்கும் இவர், பெங்களூரில் இருந்து போதைப்பொருள் வாங்கி கோவையில் விற்பனை செய்தபோது போலீசில் சிக்கி உள்ளார். இவரது பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவருக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? வேறு ஏதேனும் நோக்கத்துடன் கோவை வந்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

The post ரூ.2.50 லட்சம் போதைப்பொருளுடன் ராக்கெட் ராஜா கூட்டாளி கைது: 8 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் appeared first on Dinakaran.

Tags : Rocket Raja ,Coimbatore ,Ratnapura police ,Lakshmipuram Textile Bridge ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம்