பவுஞ்சூர் – முதுகரை வரை சாலை விரிவாக்கத்துக்கு பின் மரங்களை அகற்றாததால் விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 

செய்யூர்: பவுஞ்சூரில் இருந்து, முதுகரை இடையே சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் சாலையை ஒட்டியுள்ள மரங்களை அகற்றாததால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, விபத்துக்களை தவிர்க்க சாலையை ஒட்டியுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் இருந்து மதுராந்தகம் அடுத்த முதுகரை இணைக்கும் நெடுஞ்சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனம் முதல் பேருந்துகள் உட்பட பல்வேறு கனரக வாகனங்கள் வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளுக்கு நாள் இந்த சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் பல்வேறு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால், கூவத்தூர்-முதுகரை நெடுஞ்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறையினர் பல லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்ததோடு சாலை விரிவாக்க பணியினை கடந்த சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் துவங்கினர். இதனையடுத்து, சாலை விரிவாக்க பணியின்போது கூவத்தூர்-முதுகரை இடையே உள்ள சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வந்தனர். விறுவிறுப்பாக சாலை விரிவாக்க பணி நடந்து வந்த நிலையில், சாலையோர மரங்கள் அகற்றப்படாமல் சாலை விரிவாக்க பணியை தொடர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததால் மரங்களை அகற்றாமல் விட்டு விட்டனர்.

இதனால், சாலையில் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்ப்புகளும், கை, கால் ஊனங்களம் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலையோரு மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி இந்த நெடுஞ்சாலையில் ஏற்படும் பெரும் விபத்துகளை தவிர்க்க உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பவுஞ்சூர் – முதுகரை வரை சாலை விரிவாக்கத்துக்கு பின் மரங்களை அகற்றாததால் விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: