திருமணமான இரண்டே மாதத்தில் சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி பெண் எஸ்ஐ, கணவர் பலி

சிதம்பரம்: பைக் மீது அரசு பஸ் மோதி, பெண் எஸ்ஐ மற்றும் அவரது கணவர் பலியாகினர். திருமணமான 2 மாதத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அக்கரை ஜெயங்கொண்டபட்டினத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் கலைவேந்தன்(36). இவர் பரங்கிப்பேட்டை அருகே தனியார் பவர் பிளாண்ட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி இளவரசி(30). இவர் குமராட்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று மதியம் இருவரும் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கலைவேந்தன் பைக்கை ஓட்டி சென்றார். சிதம்பரம் அடுத்த சித்தலபாடி அருகே சென்றபோது, எதிரே கொடியம்பாளையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்ஐ இளவரசி-கலைவேந்தன் தம்பதிக்கு திருமணமாகி இரண்டு மாதமே ஆகிறது. அதற்குள் விபத்தில் பலியானது அப்பகுதியிலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post திருமணமான இரண்டே மாதத்தில் சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி பெண் எஸ்ஐ, கணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: