இந்நிலையில் தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் பேசாமல் வசித்து வந்தனர். மாடியில் இருக்கும் நாகமாணிக்கம் தினமும் கீழே வந்து உணவு, தண்ணீர் வாங்கிக்கொண்டு பேசாமல் மாடிக்கு சென்றுவிடுவார். இதனிடையே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு மருத்து சாப்பிட்டு வந்தார்.
கடந்த 29ம் தேதி வழக்கம்போல் சாப்பாடு வாங்கிச்சென்றவர் அதன்பின்னர் வெளியே வரவில்லை. கணவர் வெளியே சென்றிருப்பார் என்று நினைத்த ராஜசுலோச்சனா இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வழக்கம்போல் தனது பணியை செய்தார்.
இந்நிலையில் நேற்று மேல் மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதில் சந்தேகம் அடைந்த அவர் மாடிக்கு சென்று பார்த்தார். கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. ஜன்னல் வழியே பார்த்தபோது நாகமாணிக்கம் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த ராஜசுலோச்சனா இது குறித்து தனது மகன், மகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகமாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வயது முதிர்வால் இறந்தாரா? வேறு காரணமா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் இறந்தது தெரியாமல் மனைவி 6 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post 10 ஆண்டாக பேச்சுவார்த்தை இல்லை; கணவர் இறந்தது தெரியாமல் 6 நாள் ஒரே வீட்டில் வசித்த மனைவி: கோவையில் அதிர்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.