மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பாடாலூர்: தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றும் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 20 நாட்களில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் பெரம்பலூரில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

கொளக்காநத்தத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார ஆய்வகம் மற்றும் அலுவலகம் (அலகு) கட்டப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வட்டார பொது சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மருத்துவத்துறையில் காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்கள் இம்மாத இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: