பனிஹால்: இமயமலை மற்றும் பனிபடர்ந்த மலைகள் வழியாக கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது. காஷ்மீரில் கத்ரா – பனிஹால் இடையே ரயில் சேவையை தொடங்கும் வகையில் கடந்த மாதத்தில் தண்டவாளத்தில் 6 முறை சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவின் முதல் கேபிள் தங்க ரயில் பாலம், அஞ்சி காட் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான ரயில்வேயான கவுரியில் உள்ள செனாப் பாலம் உட்பட முக்கிய வழித்தடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இமயமலை மற்றும் பனிபடர்ந்த மலைகள் வழியாக முதல் சோதனை ரயில் நேற்று இயக்கப்பட்டது. பனிஹால் ரயில் நிலையத்தை இந்த சோதனை ரயில் பிற்பகல் 1.30மணியளவில் வந்தடைந்தது. இது குறித்து உதம்பூர்-நகர்-பாரமுல்லா ரயில்வே இணைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் குப்தா கூறுகையில், ‘‘வருகிற 7 மற்றும் 8ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சட்டரீதியான ஆய்வுகள் மற்றும் சோதனைகளை நடத்துவார். அதன் பின்னர் ஆய்வு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதனை தொடர்ந்து ரயில் சேவைகளை தொடங்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்” என்றார்.
The post ஜம்மு காஷ்மீரின் கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் இயக்கம் appeared first on Dinakaran.