இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மக்களின் சுகாதாரத்தை பேணுகின்ற வகையிலும், தூய்மையான நகரமாக விளங்குகின்ற வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும் 15 மண்டலங்களிலும் அமைக்கப்பட்ட 1,363 பேருந்து நிறுத்தங்களிலும் இரண்டு கட்டங்களாக 21.8.2024 மற்றும் 30.12.2024 ஆகிய நாட்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தை சுத்தம் செய்து, பேருந்து நிழற்குடைகள் முழுவதையும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் கண்டு, அவற்றின் அளவீடுகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் 203 மயானபூமிகளில் நேற்று தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், அனைத்து சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் உள்ள குப்பை, கட்டிட கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகள், மண்டிக்கிடக்கும் புல்செடிகள், புதர் செடிகளை அகற்றுதல், இதர தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 203 மயானபூமிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீவிர தூய்மை பணிகளில் 93.38 மெட்ரிக் டன் குப்பை, 65.78 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் என மொத்தம் 159.16 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், 666 சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
The post 203 மயானங்களில் தீவிர தூய்மை பணி; 159.16 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.