சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களில் ரூ.1,200 உயர்ந்துள்ளது. மீண்டும் சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டின் முதல் நாளான 1ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கும் விற்பனையானது. 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,400க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது.
அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,260க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் மீண்டும் சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் தங்கம் விலை தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது. இந்த தொடர் அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.100க்கு விற்பனையானது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,00,000க்கு விற்பனை செய்யப்பட்டது. வரும் நாட்களில் பொங்கல் பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்து வருவது பண்டிக்கைக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.
The post தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் 3 நாட்களில் ரூ.1,200 எகிறியது: சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.