திருச்சி: திண்டுக்கல் – திருச்சி ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எழும்பூர், ஹவுரா, மும்பை, கச்சிக்குடா விரைவு ரயில்களும், மயிலாடுதுறை, சிஎஸ்டி மும்பை விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது. ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். மதுரையில் இருந்து புறப்படும் பிகானிர் விரைவு ரயில் காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும். ராமேஸ்வரம், செகந்திராபாத் ரயில்களும் மானாமதுரை வழியாக இயக்கப்படும். தேஜஸ் ரயில் திருச்சி-மதுரை, ஈரோடு விரைவு ரயில் கரூர் -செங்கோட்டை இடையேயும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
The post திண்டுக்கல் – திருச்சி ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.