கோவை: நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார். அப்போது, கிரேன் மூலமாக சாலையில் கவிழ்ந்து கிடக்கும் எரிவாயு டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. டேங்கர் கவிழ்ந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மக்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறினார்.