நாகப்பட்டினம்,ஜன.3: நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சப்- இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த பெண்ணை சோதனை செய்தனர். அதில் அந்தப் பெண் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த பவிதா(34) என்பதும், நாகப்பட்டினம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய புகையிலை பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் பவிதாவை நாகை டவுன் இன்ஸ்பெக்டர் வேம்பு வழக்குப்பதிவு செய்து பவிதாவை கைது செய்தனர்.
The post நாகப்பட்டினத்தில் மொபட்டில் புகையிலை பொருட்கள் கடத்திய பெண் கைது appeared first on Dinakaran.