வேதாரண்யம்,ஜன.3: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி திருமாளம் பகுதியில் வசிப்பவர் தங்கையன். இவரது வீட்டில் சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் தீபரவி பக்கத்து வீட்டில் வசித்த
நாககன்னி, என்பவரது வீடும் தீப்பிடித்து முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து தலைஞாயிறு தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீச்சி தீயை அனைத்தனர். தீவிபத்தில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு பேரூர் திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூர் சுப்ரமணியன், பேரூர் துணை செயலாளர் முருகாணந்தம், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சுந்தரபிரபாகரன் மற்றும் வார்டு செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுகவினர் நிதி உதவி appeared first on Dinakaran.