4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு சாகும்வரை சிறை

மதுரை, ஜன. 3: மதுரையில் 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை வழங்கி, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன்(69). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மதுரை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ராணி ஆஜரானார். இரு தரப்பு வாதங்களின் முடிவில், நீதிபதி முத்துக் குமாரவேல் நேற்று தீர்ப்பளித்தார். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உறுதி ெசய்யப்பட்டு இருப்பதால், சுப்ரமணியனுக்கு சாகும் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

The post 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு சாகும்வரை சிறை appeared first on Dinakaran.

Related Stories: