×

கிளம்பாக்கம்-திருவான்மியூர் இடையே 2 குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: எம்டிசி அறிவிப்பு

சென்னை: கிளம்பாக்கம்- திருவான்மியூர் இடையே 2 குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்து கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. தடம் எண்.91 கே வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து திருவான்மியூர் பேருந்து நிலையம் வரை தற்போது 2 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, தடம் எண்.91 கே வழித்தடத்தில் இன்று முதல் கூடுதலாக 2 குளிர்சாதன பேருந்துகள் பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் இவ்வாறு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கிளம்பாக்கம்-திருவான்மியூர் இடையே 2 குளிர்சாதன பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: எம்டிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Klumbagam-Thiruvanmiyur ,MTC ,Chennai ,Municipal Transport Corporation ,
× RELATED வரும் 21ம் தேதி முதல் மூத்த...