×

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விரக்தி இளம்பெண் தற்கொலை

சென்னை: ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சிங்காரவேல். இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஷர்மிளா (23) என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று அதிகாலை சிங்காரவேல் பணிக்கு செல்ல மனைவி தூங்கிய அறையை தட்டியுள்ளார். ஆனால் அவர் கதவு திறக்கவில்லை.

உடனே அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது, ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே சிங்காரவேல் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி போலீசார் விரைந்து வந்து, ஷர்மிளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போது, அவரது கணவர் சிங்காரவேலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் நடந்து 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், ஆர்டிஓ விசாரணைக்கும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

The post திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விரக்தி இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Singaravel ,Alwarpet ,Chennai Metropolitan Transport Corporation ,Sharmila ,Sharmila… ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...