கரூர், ஜன. 3: ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சியை வழங்கவுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விக்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இந்த பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 வயது முதல் 32 வயது நிரம்பிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.இநத திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் கடன் appeared first on Dinakaran.