கடந்த டிசம்பரில் 5.236 மி.மெ. டன் சரக்குகளை கையாண்டு சாதனை: சென்னை துறைமுகம் தகவல்

சென்னை: சென்னை துறைமுகம் வெளியிட்ட அறிக்கை:சென்னை துறைமுகம் கடந்த மாதத்தில் 5.236 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் 1,80,686 இருபது-அடி சம அளவு அலகுகள் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்தில் 1,70,606 இருபது-அடி சம அளவு அலகுகள் கையாண்டதே அதிகபட்ச அளவாக இருந்தது. இந்த சாதனை படைத்ததற்காக கப்பல் ஆபரேட்டர்கள், ஏஜென்ட்கள், சரக்கு முனைய ஆபரேட்டர்கள், பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post கடந்த டிசம்பரில் 5.236 மி.மெ. டன் சரக்குகளை கையாண்டு சாதனை: சென்னை துறைமுகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: