மேற்கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கே.கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி விகரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” எனக்கூறிய நீதிபதிகள், கிருஷ்ணசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post மாஞ்சோலை தேயிலை தோட்டம் விவகாரம்; மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.