சென்னை: சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக போலீசாரின் தடையை மீறி வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினர் முயற்சி செய்தனர். இந்த போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது காரில் வந்தார். அப்போது போலீசார் முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தனர். அதற்கு நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டப்படி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து சமுதாய நல கூடத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரையும் நேற்று முன்தினம் மாலை விடுவிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடியது. அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிட்டி போலீஸ் ஆக்ட் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வள்ளுவர் கோட்டம் அருகே தடை மீறி போராட முயன்ற சீமான் மீது வழக்குப்பதிவு: நுங்கம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.