ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் புத்தகக் காட்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் சென்னை புத்தகக் காட்சியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 900 அரங்குகளில் அனைத்து வகையான புத்தகமும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 329,330 என்ற எண்களில் அமைந்துள்ள தினகரன்- சூரியன் பதிப்பகத்தில் வரலாறு புத்தகம், மருத்துவம் சார்ந்த புத்தகம், கவிதை புத்தகம், சிறுகதை புத்தம் என பல்வேறு வகையான புத்தகம் விற்க்கப்படுகிறது.

புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். நேற்று ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் சென்னை புத்தகக் காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் வழக்கத்தை விட அரங்குகள் அதிகம் நேரம் திறந்து இருந்தது. குழந்தைகள், கவிதை புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என அரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

5 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கான சிறப்பான புத்தகங்கள் மற்றும் சுவாரஸ்ய கதை புத்தகங்கள், கவிதை புத்தகம், சிறு கதை புத்தகம், நாவல்கள், புதினம், இலக்கியம் உள்ளிட்ட புத்தகம் அதிக அளவில் மக்கள் வாங்கி செல்கின்றனர். புத்தகப் பதிப்பாளர்கள் தகுந்த தள்ளுபடிகளையும் அளித்து வருகின்றனர். வரும் நாட்களில் இன்னும் அதிக அளவில் மக்கள் புத்தகக் காட்சிக்கு வருவார்கள் என பதிப்பாளர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

* இன்றைய நிகழ்வு
இன்று மாலை 6 மணிக்கு, ‘ஒன்றே முக்காலும், நாலும்’ என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத், ‘கதைத் தொழிற்சாலை’ – பட்டுக்கோட்டை பிரபாகர், ‘எனைத்தானும் நல்லவை கேட்க..’ – ஜெய ஹரிஷ், ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற தலைப்பில் ேஹம மாலினி ஆகியோர் பேசுகின்றனர். பபாசி செயற்குழு உறுப்பினர் இராம.கண்ணப்பன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

The post ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் புத்தகக் காட்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: